by Staff Writer 29-04-2020 | 7:00 PM
Colombo (News 1st) இந்தியாவின் புதுடெல்லியில் சிக்குண்டிருந்த 143 இலங்கை மாணவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி நகரிலுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானமொன்று 8 விமான ஊழியர்களுடன் இன்று காலை புறப்பட்டது.
மாணவர்களுடன் குறித்த விமானம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.