by Staff Writer 29-04-2020 | 3:00 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டிருந்த அக்கரைப்பற்று 19 ஆம் பிரிவு இன்று (29) விடுக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கடந்த 8 ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இதனையடுத்து 9 ஆம் திகதி முதல் அக்கரைப்பற்று 19 ஆம் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.
கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குறித்த பகுதி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.