தென் கொரிய பண்டகசாலை ஒன்றில் தீ: 36 பேர் பலி

தென் கொரிய பண்டகசாலை ஒன்றில் தீ: 36 பேர் பலி

தென் கொரிய பண்டகசாலை ஒன்றில் தீ: 36 பேர் பலி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

29 Apr, 2020 | 7:17 pm

Colombo (News 1st) தென் கொரியாவின் Icheon நகரிலுள்ள பண்டகசாலை ஒன்றில் பரவிய தீயில் சிக்கி குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பண்டகசாலையின் முன்னெடுக்கப்பட்ட நிர்மாணப்பணிகளின் போது, எரியக்கூடிய பொருளொன்று வெடித்தமையே தீ ஏற்பட்டமைக்கான காரணம் என தென் கொரிய ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்தவர்கள் அனைவரும் நிர்மாணப் பணியாளர்கள் எனக் கூறப்படுகின்றது.

இதேவேளை, தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் வௌியிடப்படுகின்றது.

இதில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்