சிரியாவில் குண்டுத் தாக்குதல்: 40 பேர் உயிரிழப்பு

சிரியாவில் குண்டுத் தாக்குதல்: 40 பேர் உயிரிழப்பு

சிரியாவில் குண்டுத் தாக்குதல்: 40 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

29 Apr, 2020 | 4:43 pm

Colombo (News 1st) சிரியாவின் வட மேற்கே அமைந்துள்ள Afrin பிராந்தியத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

சன நெரிசல் மிக்க சந்தைத் தொகுதியொன்றில் எரிபொருள் தாங்கி கைக்குண்டை கொண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக துருக்கியின் எல்லை மாகாணமொன்றின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

எனினும் தாக்குதல் தொடர்பில் குர்திஷ் கிளர்ச்சிக்குழு மீது துருக்கிய பாதுகாப்பு அமைச்சு குற்றஞ்சுமத்தியுள்ளது.

துருக்கிய படையினர் மற்றும் சிரிய எதிர்க்கட்சி ஆதரவு படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள Afrin பிராந்தியத்திலேயே குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்