மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளோருக்கு நிவாரணம்

மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளோருக்கு நிவாரணம்

by Staff Writer 28-04-2020 | 3:12 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள வௌிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குமாறு அரச திரைசேறிக்கு அறிவித்துள்ளதாக பொருளாதார மறுசீரமைப்பு வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. அந்தந்த கிராம சேவையாளர் பிரிவுகளில் சிக்கியுள்ளோர் தொடர்பில் கிராம உத்தியோகத்தர் மற்றும் பொலிஸாரின் தலையீட்டில் குறித்த நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்ட செயலாளர்களின் பூரண கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளுக்கு இணங்க, வௌி மாவட்டங்களில் இருந்து தொழில் நிமித்தம் வருகைதந்த 52,000 இற்கும் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக மறுசீரமைப்பு வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.

ஏனைய செய்திகள்