இன்றும் 164 பேர் நாடு திரும்பினர்

இன்றும் 164 பேர் நாடு திரும்பினர்

by Staff Writer 28-04-2020 | 2:56 PM
Colombo (News 1st) இந்தியாவில் இருந்து மேலும் 164 இலங்கையர்கள் இன்று (28) நாடு திரும்பியுள்ளனர். பெங்களூரு நோக்கி இன்று புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான குறித்த விமானம் இன்று மதியம் 12.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்படும் இலங்கையர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன், PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக வௌிநாட்டு உறவுகள் தொடர்பிலான ஜனாதிபதி மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.