நகை அடகு வைப்பதற்கான அதிகபட்ச வருடாந்த வட்டி

நகை அடகு வைப்பதற்கான அதிகபட்ச வருடாந்த வட்டி

நகை அடகு வைப்பதற்கான அதிகபட்ச வருடாந்த வட்டி

எழுத்தாளர் Staff Writer

28 Apr, 2020 | 3:19 pm

Colombo (News 1st) உரிமம் பெற்ற வங்கிகளின் அடகு முற்பணங்களின் மீது இலங்கை மத்திய வங்கி அதிகபட்ச வட்டி வீதங்களை விதித்துள்ளது.

Covid – 19 பரவலின் விளைவாக ஏற்பட்ட பாதகமான பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு தமது குறுங்கால நிதித் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்காக தங்க நகைகளை அடகுவைக்கும் குறைந்த வருமானமீட்டும் தனிநபர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இலங்கை மத்திய வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதற்கிணங்க, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி முதல் அடைமானம் வைக்கப்படும் தங்கத்தினால் செய்யப்பட்ட தனிநபர் உடைமைகளின் பிணை மீது வழங்கப்பட்ட கடன் பணத்தின் மீது விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச வருடாந்த வட்டியை 12 சதவீதமாக நிர்ணயிக்குமாறு நாணயவிதி சட்டக் கட்டளை பிறப்பித்துள்ளது.

அடகுக் கடன் காலம் ஒரு வருடத்திற்குக் குறைவானதெனின் மாதாந்த வட்டியை 1 சதவீதமாக நிர்ணயிக்க கோரி உரிமம் பெற்ற வங்கிகளுக்கு நாணயவிதி சட்டக் கட்டளை பிறப்பித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்