இரத்த வங்கியினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

தேசிய இரத்த வங்கியினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

by Staff Writer 27-04-2020 | 7:31 PM
Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையை கருத்திற்கொண்டு தேசிய இரத்த வங்கியினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரத்ததான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது கடினம் என்பதால் இரத்தம் பெற்றுக்கொள்வதை இலகுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் லக்‌ஷ்மன் எதிரிசிங்க கூறியுள்ளார். இதனால், கொடையாளர்கள் தேசிய இரத்த வங்கிக்கு வருகைதந்து இரத்ததானம் செய்வதை இலகுபடுத்தும் நோக்கில் 24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையில் இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் , இரத்த தானம் வழங்க விரும்புவோர் 011 533 2153 அல்லது 011 533 2154 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு தங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள முடியும். இதற்கு மேலதிகமாக nbts.life என்ற இணைய பக்கத்திற்குள் உட்பிரவேசிப்பதன் மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.