கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 584 ஆகியது

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 584 ஆகியது

by Staff Writer 27-04-2020 | 9:40 PM
Colombo (News 1st) Update: 

27/04/2020 ; 9.30 PM: மேலும் 2 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 584 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

------------------------------------------------------------------------------------------------------------------------------- Update: 

27/04/2020 ; 9.17 PM: 

மேலும் ஒரு கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 582 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 
-------------------------------------------------------------------------------------------------------------------------------- Update: 

27/04/2020 ; 7.58 PM: மேலும் 10 கொரோன நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 581 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. -------------------------------------------------------------------------------------------------------------------------------- Update:

27/04/2020 ; 6.32 PM: 

மேலும் 4 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. --------------------------------------------------------------------------------------------------------------------------------

Update: 27/04/2020 ; 4.49 PM: மேலும் 10 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 567 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. --------------------------------------------------------------------------------------------------------------------------------- Update: 27/04/2020 ; 2.40 PM: கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 523 ஆக பதிவாகியுள்ளது. நேற்றிரவு 18 பேர் தொற்றுக்குள்ளானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 63 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது நாட்டில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் அதிகமாக அடையாளம் காணப்பட்ட தொகையாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 523 பேரில் 396 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 120 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.