by Chandrasekaram Chandravadani 27-04-2020 | 3:44 PM
Colombo (News 1st) Covid-19 வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கான அத்தாட்சிப் பத்திரத்தை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக சிலி அரசாங்கம் அறிவித்துள்ளது.
மக்கள் தமது வேலைகளுக்கு மீளத் திரும்புவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிலியின் சுகாதார பிரதி அமைச்சர் Paula Daza தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கொரோனா தொற்றுக்குள்ளானோர் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகாமல் இருப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தி, அவர்களின் உடலில் உருவாகியுள்ளமைக்கான ஆதாரங்கள் எவையும் இல்லையென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், சிலி அரசாங்கத்தினால் வழங்கப்படும் அத்தாட்சிப் பத்திரமானது கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஏதுவாக அமையலாமெனவும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
சிலியில் கொரோனா தொற்றினால் 189 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 13,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.