கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தியது நியூஸிலாந்து

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தியது நியூஸிலாந்து

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தியது நியூஸிலாந்து

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

27 Apr, 2020 | 4:19 pm

Colombo (News 1st) Covid-19 சமூகத்திற்குள் பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளதாக நியூஸிலாந்து அறிவித்துள்ளது.

அங்கு புதிதாகத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை, கடந்த பல நாட்களாக தனி இலக்கத்திலேயே பதிவாகுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்றையதினம் ஒருவர் மாத்திரமே நியூஸிலாந்தில் புதிதாகத் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

தற்போதைய நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தமது நாடு வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் ஜசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான இறுக்கமான சமூகக் கட்டுப்பாடுகளை நியூஸிலாந்து தளர்த்துவதற்கு முன்பதாக இந்தத் தகவல் வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளைய தினத்திலிருந்து அத்தியாவசிய தேவைகளற்ற வர்த்தக நிலையங்கள் சிலவற்றைத் திறப்பதற்கும் சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்