வடக்கின் இரு வேறு இடங்களில் இரு சடலங்கள் மீட்பு

வடக்கின் இரு வேறு இடங்களில் இரு சடலங்கள் மீட்பு

வடக்கின் இரு வேறு இடங்களில் இரு சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

26 Apr, 2020 | 6:59 pm

Colombo (News 1st) வட மகாகாணத்தின் இருவேறு பகுதிகளில் இன்று (26) இரண்டு சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

யாழ். சுன்னாகம் வீதியோரத்தில் ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் புற்றுநோயால் அவதிப்பட்டதாகவும் இதனால் தற்கொலை செய்துகொள்ளும் வகையில் செயற்பட்டிருந்ததாகவும் உயிரிழந்தவரின் உறவினர்கள் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ். கொழும்புத்துறை கடற்கரை வீதிப்பகுதியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 31 வயதான பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கணவர் – மனைவி இடையில் நேற்றிரவு இடம்பெற்ற தகராறின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், குறித்த பெண்ணின் கணவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்