கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 452 ஆக உயர்வு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 452 ஆக உயர்வு

by Staff Writer 25-04-2020 | 9:55 PM

Colombo (News 1st) Update : 25/04/2020 ; 9.50 PM: நாட்டில் மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

Update : 25/04/2020 ; 9.17 PM: மேலும் 9 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 449 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. ------------------------------------------------------------------------------------------------------------------------------

Update : 25/04/2020 ; 7.25 PM: நாட்டில் ​மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 440 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

25/04/2020 ; 6.50 PM: மேலும் 2 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

-------------------------------------------------------------------------------------------------------------------------------

25/04/2020 ; 5.40 PM: 

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 433 ஆக உயர்வடைந்துள்ளது. இன்றைய தினம் மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் 7 பேரும் வெலிசறை கடற்படை முகாமில் 4 சிப்பாய்களும் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கடற்படை சிப்பாய் ஒருவரும் பண்டாரநாயக்கபுர பகுதியில் 12 வயது சிறுவன் ஒருவனும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்று மாத்திரம் 49 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதன்பிரகாரம், வெலிசறை கடற்படை முகாமில் இதுவரை 69 பேர் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதேநேரம், கொரோனா தொற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 297 பேர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் மேலும் 7 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.