பேலியகொடை மீன் சந்தை மொத்த விற்பனைக்காக திறப்பு

பேலியகொடை மீன் சந்தை மொத்த விற்பனைக்காக திறப்பு

பேலியகொடை மீன் சந்தை மொத்த விற்பனைக்காக திறப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Apr, 2020 | 6:42 pm

Colombo (News 1st) பேலியகொடை மீன் சந்தை கடந்த 3 நாட்களின் பின்னர் மொத்த விற்பனைக்காக இன்று (25) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் அனைவரையும் பொலிஸார் சோதனைக்குட்படுத்தினர்.

அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள் மாத்திரமே மீன் சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கல்முனை, வாழைச்சேனை போன்ற பகுதிகளில் இருந்தே அதிகமாக இன்று மீன்கள் கொண்டுவரப்பட்டிருந்தாக பேலியகொடை மீன் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமரச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறிப்பிடத்தக்களவு வருமானத்தை இன்றைய தினம் ஈட்ட முடியவில்லை என மீன் சந்தை வர்த்தகர்கள் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்