இந்தியாவிலிருந்து மேலும் 163 மாணவர்கள் நாடு திரும்பினர்

இந்தியாவிலிருந்து மேலும் 163 மாணவர்கள் நாடு திரும்பினர்

இந்தியாவிலிருந்து மேலும் 163 மாணவர்கள் நாடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

25 Apr, 2020 | 3:45 pm

Colombo (News 1st) இந்தியாவிலிருந்து மேலும் 163 மாணவர்கள் இன்று (25) நாடு திரும்பியுள்ளனர்.

மாணவர்களை அழைத்து வருவதற்காக இன்று முற்பகல் விசேட விமானமொன்று மும்பை நோக்கி புறப்பட்டு சென்றதாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்திருந்தது.

இன்று பிற்பகல் 2.25 மணியளவில் குறித்த விமானம் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்த விசேட விமானத்தில் 166 மாணவர்கள் நாட்டிற்கு வருகைதரவிருந்த போதிலும் மூவர் நாடு திரும்புவதற்கு தயார் நிலையில் இல்லாதமையால் 163 மாணவர்களே நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அழைத்துவரப்படும் மாணவர்கள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளதுடன், PCR பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவிலுள்ள இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பங்களாதேஷிலுள்ள 80 மாணவர்கள் ஆகியோரை கட்டம் கட்டமாக நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்