சட்ட மா அதிபர் திணைக்களத்தை திறக்க அனுமதி கோரல்

சட்ட மா அதிபர் திணைக்களத்தை மீள திறக்க அனுமதி கோரல்

by Staff Writer 24-04-2020 | 5:50 PM
Colombo (News 1st) சட்ட மா அதிபர் திணைக்களத்தை மீண்டும் திறப்பதற்கு சட்ட மா அதிபர் உரிய அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளார். அரசாங்க புலனாய்வுப் பிரிவு பணிப்பாளருக்கு, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமந்தி தர்மாவர்தன மின்னஞ்சல் மூலம் விடுத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என PCR சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், திணைக்களத்தை திறப்பது மற்றும் அங்கு அதிகாரிகள் செல்வது ஆகியன பாதுகாப்பானதா என அறிவிக்குமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதால், சட்ட மா அதிபர் திணைக்களத்தை கடந்த திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்புக் கடமையிலுள்ள ஊழியர்களுக்கு உணவு வழங்கும் பாதுகாப்பு உத்தியோகத்தரான பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.