அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 50,000-ஐ கடந்தது

அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 50,000-ஐ கடந்தது

by Bella Dalima 24-04-2020 | 3:23 PM
Colombo (News 1st) அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளது. 24 மணித்தியாலங்களில் 2,300-க்கும் அதிக கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50,236 ஆக அதிகரித்துள்ளது. நியூயோர்க் மாநிலத்திலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன. அங்கு 20,861 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 8 ,86,709 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்கான சிகிச்சைகள் தொடர்பில் ஆராய வேண்டிய தருணம் இதுவென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சூரிய ஔி , புற ஊதாக் கதிர்கள் மற்றும் தடுப்பூசி என்பனவற்றினூடாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியுமா என்பது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.