புத்தளம் சாஹிரா கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 82 பேர் வீடு திரும்பினர்

by Staff Writer 24-04-2020 | 6:35 PM
Colombo (News 1st) புத்தளம் சாஹிரா கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 82 பேர் இன்று வீடுகளுக்கு திரும்பினர். புத்தளத்தை சேர்ந்த 70 பேரும் மருதானையை சேர்ந்த 8 பேரும் சிலாபத்தை சேர்ந்த நால்வரும் இதில் அடங்குகின்றனர். புத்தளம் - கடுமையான்குளத்தை சேர்ந்த ஒருவர் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவருடன் தொடர்புகளை பேணியவர்களே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தனிமைப்படுத்தல் முகாமில் கடந்த 26 நாட்களாக தனிமைப்பட்டிருந்த குறித்த 82 பேருக்கு புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்