இந்தியாவிலிருந்து 101 மாணவர்கள் அழைத்துவரப்பட்டனர்

இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 101 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

by Bella Dalima 23-04-2020 | 6:48 PM
Colombo (News 1st) இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 101 பேர் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL1146 இலக்க விசேட விமானத்தில் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை மாணவர்கள் இன்று பகல் 2.26-க்கு தாயகத்தை வந்தடைந்தனர். குறித்த மாணவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாகிஸ்தானில் சிக்கியிருந்த 113 மாணவர்கள் நேற்று நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.