அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் உருவாக்கம் 

அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை உருவாக்கியுள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்

by Staff Writer 23-04-2020 | 8:35 PM
Colombo (News 1st) சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களும் மாணவர்களும் இணைந்து அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் சிலவற்றை உருவாக்கியுள்ளனர். அவை இன்று பல்கலைக்கழகத்தில் ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன COVID-19 ஐ கட்டுப்படுத்துவதற்காக இந்த உபகரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இவை தன்னியக்க கருவி மூலம் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. மாணவர்களால் தயாரிக்கப்பட்ட செயற்கை சுவாசக் கட்டமைப்பும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.