தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Apr, 2020 | 6:36 pm

Colombo (News 1st) எதிர்வரும் பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவிப்பொன்றை வௌியிட்டது.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக இதுவரை கிடைத்துள்ள அனைத்து விண்ணப்பங்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்னதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஒப்படைக்க தபால் மா அதிபர் நடவடிக்கை எடுப்பார் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மார்ச் மாதம் 17 ஆம் திகதி முடிவுக்கு வந்தது.

அன்றைய திகதி வரை அத்தாட்சிப்படுத்தும் அதிகாரிகளுக்கு கிடைத்திருந்த விண்ணப்பங்களை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அத்தாட்சிப்படுத்தும் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இதனை தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான புதிய திகதியாக கருதக் கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்