பயணிகளின் காத்திருப்பு கால அவகாசம் நீடிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடைமாறும் பயணிகளுக்கான காத்திருப்பு கால அவகாசம் நீடிப்பு

by Bella Dalima 23-04-2020 | 2:57 PM
 Colombo (News 1st) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் இடைமாறும் பயணிகளுக்கான காத்திருப்பு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. 6 மணித்தியாலங்கள் மேலதிகமாக காத்திருப்பிற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய , இடைமாறும் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 12 மணித்தியாலங்கள் காத்திருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.