அக்கரைப்பற்றில் சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்

அக்கரைப்பற்றில் சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்

அக்கரைப்பற்றில் சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

23 Apr, 2020 | 3:27 pm

Colombo (News 1st) அக்கரைப்பற்றில் சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான சமுர்த்தி உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று நகர் பிரிவு – 05 சமுர்த்தி உத்தியோகத்தர் மீதே நேற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்ற போது சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்