பேலியகொடை மீன் சந்தை ஊழியர்களுக்கு PCR பரிசோதனை

by Staff Writer 22-04-2020 | 8:44 PM
Colombo (News 1st) பேலியகொடை மீன் சந்தையில் சேவையாற்றுவோர் இன்று PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களில் இன்று சுமார் 500 பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அடுத்த கட்டமாக ஏனைய ஊழியர்களை பரிசோதனைக்கு உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார். இந்த பரிசோதனையின் பின்னர் நுகர்வோரும் மீனவர்களும் சந்தைக்கு வருகை தர வாய்ப்புக் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வௌியிட்டார். இதேவேளை, பேலியகொடை மீன் சந்தையில் இன்று கடற்படையினர் கிருமித் தொற்று நீக்கம் செய்தனர். மீன் சந்தையின் சில்லறை வர்த்தகம் நேற்று (21) பிற்பகல் முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மீன் சந்தையில் மொத்த வர்த்தக நடவடிக்கை மாத்திரமே நடைபெறுகின்றது. இதனால் சில்லறை வர்த்தகத்திற்காகவும், சில்லறை விலையில் மீன் கொள்வனவு செய்வதற்காகவும் பேலியகொடை மீன் சந்தைக்கு வருவதை தவிர்க்குமாறு கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்