ரமழான் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை

ரமழான் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை

ரமழான் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை

எழுத்தாளர் Staff Writer

22 Apr, 2020 | 7:20 pm

Colombo (News 1st) ஹிஜ்ரி 1441 ஆம் ஆண்டிற்கான ரமழான் மாத தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை (23) நடைபெறவுள்ளது.

நாளை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமழான் மாத தலை பிறையை தீர்மானிக்கும் இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, பிறைக்குழு , முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

எனினும், நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மாத்திரமே பிறை தீர்மானிக்கும் மாநாட்டில் பங்குபற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் எங்காவது ரமழான் மாத தலை பிறை தென்பட்டால் உத்தியோகபூர்வமாக நாட்டு மக்களுக்கு அதனை அறிவிக்கவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் எம். தஸ்லீம் மௌலவி தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்