சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளன

சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளன

சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

22 Apr, 2020 | 4:03 pm

Colombo (News 1st) சிங்கப்பூரில் அமுலிலுள்ள முடக்கல் நிலை ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன், கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளன.

வௌிநாட்டுப் பணியாளர்கள் தங்கியுள்ள வசிப்பிடங்களில், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, சிங்கப்பூரில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்டத் தொற்றை வெற்றிகரமாகக் கையாண்ட விதம் தொடர்பில், உலகின் கவனத்தை சிங்கப்பூர் ஈர்த்திருந்ததுடன், பாராட்டுதல்களையும் பெற்றிருந்தது.

இருப்பினும், இரண்டாம் கட்ட தொற்று விரைவாகப் பரவலடைந்தமையானது, கொரோனா வைரஸ் இலகுவாக மீளப்பரவக்கூடியது என்பதை வௌிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிகளவிலான கொரோனா நோயாளர்கள் சிங்கப்பூரில் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி அங்கு 200 நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்