கொரோனா தடுப்பு பணிகளுக்கு விஜய் நிதியுதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்கு விஜய் நிதியுதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்கு விஜய் நிதியுதவி

எழுத்தாளர் Staff Writer

22 Apr, 2020 | 5:20 pm

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. சினிமா படப்பிடிப்புகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வேலையிழந்து தவிக்கும் தமிழ் சினிமா தொழிலாளர்களுக்காக பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது.

திரை பிரபலங்கள் பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர். அந்த வகையில், பெப்சிக்கு நடிகர் விஜய் 25 இலட்சம் (இந்திய) ரூபா நிதியுதவி அறிவித்துள்ளார். அதேபோல், தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதிக்கு 50 இலட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு 25 இலட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இது தவிர, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 இலட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 5 இலட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மொத்தமாக 1.30 கோடி (இந்திய) ரூபா வழங்குவதாக விஜய் அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்