சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் காலமானார்

எழுத்தாளர் Staff Writer

21 Apr, 2020 | 8:44 pm

Colombo (News 1st) சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் இன்று காலமானார்.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அன்னார் தனது 65 ஆவது வயதில் இன்று காலமானார்.

இலங்கையின் தமிழ் ஊடகத்துறையில் நடுநிலை செய்தியாளராகவும், சர்வதேச செய்தி அறிக்கையிடலின் சிறப்புத் தேர்ச்சி பெற்றவராகவும் அன்னார் அளப்பரிய பங்காற்றியுள்ளார்.

பல்வேறு தமிழ் பத்திரிகைகளில் சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் எழுதிய கட்டுரைகள் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன.

சக்தி FM – நியூஸ்ஃபெஸ்ட்டின் செய்தி ஆசிரியராகவும் நல்லதம்பி நெடுஞ்செழியன் நீண்டகாலமாக பணியாற்றியிருந்தார்.

அன்னாரது சேவையைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் அவருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்