ஏப்ரல் 21 தாக்குதல்: இழப்பீடு வழங்கல் நிறைவு

ஏப்ரல் 21 தாக்குதல்: இழப்பீடு வழங்கல் நிறைவு

ஏப்ரல் 21 தாக்குதல்: இழப்பீடு வழங்கல் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

21 Apr, 2020 | 3:48 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கும் செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரை இழப்பீடுகள் கிடைக்கப்பெறாதவர்கள் இருப்பின், அதுகுறித்து அறிவிக்குமாறு துறைசார் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

அவ்வாறானவர்களுக்கு ஒரு வாரங்களுக்குள் இழப்பீடுகளை வழங்கத் தயார் எனவும் அவர் கூறினார்.

அதற்கமைய, இதுவரை இழப்பீடுகள் கிடைக்கப்பெறாதவர்கள் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் இராஜாங்க செயலாளர் கீதாமுனி கருணாரத்னவிடம் தகவல்களை வழங்க முடியும் என துறைசார் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் 071 23 44 866 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு அறிவிக்குமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்