ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: ஜனாதிபதி தெரிவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Apr, 2020 | 3:00 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

தனது கொள்கை பிரகடனத்திற்கு அமைய, ஆட்சிக்காலத்தில் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரிவினைவாதிகளுக்கும் பிரிவினைவாத செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஜனாதிபதி தனது அனுதாபங்களை பகிர்ந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்