தேர்தலை உடனடியாக நடத்தும் தேவை எழவில்லை

தேர்தலை உடனடியாக நடத்தும் தேவை எழவில்லை: மயில்வாகனம் திலகராஜா கடிதம்

by Staff Writer 20-04-2020 | 5:41 PM
Colombo (News 1st) கொரோனா இடர் நிறைந்த காலப்பகுதியில் பாராளுமன்றத் தேர்தலை உடனடியாக நடத்தும் தேவை எழவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா கடிதம் மூலம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிடம் அறிவித்துள்ளார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேர்தலை நடத்தாமல் இருப்பதே தொழிலாளர் தேசிய முன்னணியின் நிலைப்பாடாகும் என கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் மயில்வாகனம் திலகராஜா சுயாதீன தேர்தல்கள் ஆணையகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை ஆயுளைக் கொண்டிருந்த எட்டாவது பாராளுமன்றம் நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கொண்டே முன்கூட்டியே கலைக்கப்பட்டதாக அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச அனுபவங்களின் அடிப்படையில், தேசிய நலனில் அக்கறை கொண்டு உடனடியாக தேர்தலை நடத்தாதிருக்க ஆவண செய்ய வேண்டும் என அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் கேட்டுக்கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.