தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி திறக்கப்பட்டுள்ளது

தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி திறக்கப்பட்டுள்ளது

தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி திறக்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2020 | 2:51 pm

Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிவேக வீதியில் சாதாரண வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர குறிப்பிட்டார்.

ஊரடங்கு சட்டம் மற்றும் மாவட்டங்களுக்கான வரையறைகளுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எனினும், அத்தியாவசியத் தேவைக்கு எவ்வித வரையறைகளும் இல்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

அத்தியாவசியத் தேவைகள் காணப்படும் பட்சத்தில், கொட்டாவையிலிருந்து கடவத்தை வரை பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு இல்லாவிடின் கொட்டாவையில் வௌியேறுதல் வேண்டும்.

அதிவேக வீதியில் பயணிப்பதற்கான கட்டணங்கள் வழமைபோல அறவிடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்