கொழும்பின் 5 பகுதிகளில் பலத்த கண்காணிப்பு

கொழும்பின் 5 பகுதிகளில் பலத்த கண்காணிப்பு

கொழும்பின் 5 பகுதிகளில் பலத்த கண்காணிப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Apr, 2020 | 8:04 pm

Colombo (News 1st) கொழும்பு நகரம் மற்றும் சனநெரிசல் மிக்க 5 பகுதிகள் தற்போது பலத்த கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளுக்குள் நுழைவதற்கோ, அங்கிருந்து வௌியேறுவதற்கோ முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை – அருணாலோக மாவத்தை , மருதானை – ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தை மற்றும் குணசிங்கபுர – மிஹிது மாவத்தை என்பன அதில் சில பகுதிகளாகும்.

கொழும்பு , கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதுடன், பலத்த கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அங்குள்ள 31 குடும்பங்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நிலையங்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஏனையவர்கள் வீடுகளுக்குள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்