இலங்கை – தென்னாபிரிக்கா இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

இலங்கை – தென்னாபிரிக்கா இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

இலங்கை – தென்னாபிரிக்கா இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2020 | 3:27 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜூன் மாதம் நடைபெறவிருந்த தென்னாபிரிக்கா – இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் உள்ளது. இங்கிலாந்து – இலங்கை, இந்தியா- தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா – நியூசிலாந்து தொடர்கள் இடையில் நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஜூன் மாதத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸிற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. மேலும், இந்த தொற்று எப்போது கட்டுக்குள் வரும் என்று யாராலும் கூற முடியவில்லை.

இதனால், ஜூன் மாதம் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஜூன் மாதம் தென்னாபிரிக்கா அணி இலங்கையில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவிருந்தது. தற்போது இந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்