அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1891பேர் உயிரிழப்பு

கொரோனா: அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,891 பேர் உயிரிழப்பு

by Bella Dalima 19-04-2020 | 5:19 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,891 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் அங்கு பாதித்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,891 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது வரை 7,38,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 39,015 ஆக உள்ளது. அதே நேரத்தில் கொரோனாவில் இருந்து 68,285 பேர் மீண்டுள்ளனர். ஏப்ரல் 19 ஆம் திகதி நிலவரப்படி 2,41,041 பேர் பாதிக்கப்பட்டு, 17,671 இறப்புகள் பதிவாகியுள்ள பகுதியாக நியூயார்க் உள்ளது. இரண்டாவது அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான நியூ ஜெர்சியில் இதுவரை 81,420 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4,070 பேர் உயிரிழந்துள்ளனர்.