தேர்தலுக்கான திகதி அறிவிப்பில் அவசரப்பட வேண்டாம்: ரிஷாட் பதியுதீன்

தேர்தலுக்கான திகதி அறிவிப்பில் அவசரப்பட வேண்டாம்: ரிஷாட் பதியுதீன்

தேர்தலுக்கான திகதி அறிவிப்பில் அவசரப்பட வேண்டாம்: ரிஷாட் பதியுதீன்

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2020 | 7:36 pm

Colombo (News 1st) தேர்தலுக்கான திகதி அறிவிப்பில் அவசரப்பட வேண்டாம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் நடத்தக்கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாமென ரிஷாட் பதியுதீன், தேர்தல் ஆணைக்குழுத் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத்துறையினரால் ஊரடங்கு சட்டம் நீக்கப்படலாம் என்று தீர்க்கமாக அறிவிக்கப்படும் வரை, பொதுத்தேர்தல் நடைபெறக் கூடிய திகதியை அறிவிப்பது சிறந்தது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேர்தல் திகதி தொடர்பில் முடிவை எட்டுமாறும் ரிஷாட் பதியுதீன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்