தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடிதம்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடிதம்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடிதம்

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2020 | 2:45 pm

Colombo (News 1st) தேர்தல் திகதி தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

தற்போதைய சூழலில் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்கக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தலை நடத்துவது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக அமையும் என்ற போதிலும், தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் தேர்தல் நடத்தப்படக்கூடாது என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூகோள தொற்றுக்கு மத்தியில், உலகின் ஏனைய நாடுகளைப் போன்று இலங்கைக்கும் சுகாதார பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்தல் ஆகியவற்றுக்கான முயற்சியே தற்போது அவசியம் என அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்கள் கூடுவதைக் குறைக்குமாறு உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு மருத்துவர்கள் குறிப்பிடுவதாகவும் சுகாதாரப் பிரிவின் கவனத்திற்குக் கொண்டு சென்றதன் பின்னரே அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்