கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிக்க விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு

கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிக்க விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு

கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிக்க விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Apr, 2020 | 3:02 pm

Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

26,000 கொள்கலன்கள் தற்போது துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க குறிப்பிட்டார்.

இவற்றை விரைவாக விடுவிப்பது தொடர்பில் இறக்குமதியாளர்கள், சுங்கத் திணைக்களத்தினர், வங்கி முகாமையாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதற்கமைய, கொள்கலன்களை விடுவிப்பதற்கான கட்டணங்களை செலுத்துவதற்கு வங்கிக் கிளைகளை நாளை (20) தொடக்கம் மேலதிக நேரம் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொள்கலன்களை விடுவிப்பதற்கான முனையங்களை அதிகரிப்பதற்கும் சுங்கத் திணைக்களத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ள கொள்கலன்களின் அளவு உச்சமட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவற்றை விடுவிப்பதற்கே விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்