by Bella Dalima 18-04-2020 | 8:23 PM
Colombo (News 1st) கொரோனா ஒழிப்பு நிலைமை தொடர்பிலான வெற்றி குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இன்று தௌிவுபடுத்தினார்.
COVID-19 தொடர்பான சமூக பரவல் நிலை இதுவரை இலங்கையில் இல்லை எனவும் குறிப்பிட்ட இடங்களுக்குள் அது மட்டுப்படுத்தப்பட்ட நிலை காணப்படுவதாகவும் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
எனினும், கொரோனா அபாயம் முற்றிலும் இல்லை என கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
அபாய நிலை தொடர்வதால், முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தொடர வேண்டியுள்ளதாகக் கூறிய அவர், COVID-19 நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நிலவும் கட்டுப்பாட்டு நிலைமையைத் தொடர்ந்தும் பேணுவதன் மூலம் அபாய நிலையை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் முழுமையாக நீக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டார்.