சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு அறிவிக்கப்படவில்லை

சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு எவ்வித சுற்றறிக்கைகளும் வௌியிடப்படவில்லை - அனில் ஜாசிங்க

by Staff Writer 18-04-2020 | 3:48 PM
Colombo (News 1st) வைத்தியசாலைகளில் வழமையாக நடத்தப்படும் சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு எவ்வித சுற்றறிக்கைகளும் வௌியிடப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். சில கட்டுப்பாடுகளுடன் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் என அறிக்கை ஒன்றினூடாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார். எனினும், ஒரு பகுதி ஊழியர்களை வீட்டிலிருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளதற்கு அமைய, நாளாந்த செயற்பாடுகள் குறைந்த ஊழியர்களுடனேயே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் வழமையான சேவைகளை உரிய முறையில் மேற்கொள்வதற்கான பணியாட்கள் போதுமானளவு இல்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். எனினும், வழமையாக முன்னெடுக்கப்படும் சத்திர சிகிச்சைகள் மற்றும் புற்றுநோயாளர்களுக்கான சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு அறிவிக்கப்படவில்லை என அவர் கூறினார். இதேவேளை, பிற்போடக்கூடிய சத்திர சிகிச்சைகள் தொடர்பில் தேவையான வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

ஏனைய செய்திகள்