அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக உணவு திணைக்களம் அறிவிப்பு

by Staff Writer 18-04-2020 | 8:39 PM
Colombo (News 1st) நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக உணவு திணைக்களம் அறிவித்துள்ளது. அரிசி, பருப்பு, ரின் மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக உணவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜே.கிருஸ்ணமூர்த்தி குறிப்பிட்டார். அதற்கமைய, லங்கா சதொச, கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஆகியவற்றினூடாக உணவுப் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்க உள்ளதாக அவர் கூறினார். இதேவேளை, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களூடாக நிவாரண விலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் காணப்படும் மொத்த களஞ்சியத்தை ஆராய்ந்து தேவையான அளவு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய, தூதுவராலயங்களூடாக இணைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மாதமொன்றுக்கு இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி தேவைப்படுவதாக உணவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜே.கிருஸ்ணமூர்த்தி குறிப்பிட்டார். நெல் அறுவடையின் பின்னர், தேவையை பூர்த்தி செய்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டினார்.