மாத்தறையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது பொல்லால் தாக்குதல்: இளைஞர் கைது

மாத்தறையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது பொல்லால் தாக்குதல்: இளைஞர் கைது

எழுத்தாளர் Staff Writer

18 Apr, 2020 | 3:57 pm

Colombo (News 1st) மாத்தறை – கொட்டப்பொல பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது பொல்லால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

48 வயதான சமுர்த்தி அபிவிருத்து உத்தியோகத்தர் ஒருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

5000 ரூபா கொடுப்பனவை பெற்றுத்தருமாறு கோரி நபர் ஒருவர் சமுர்த்தி உத்தியோகத்தர் மீது நேற்றிரவு தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்குதலுக்கு இலக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் தெனியாய , கொலவெனிகம – குடகலஹேன பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்