புத்தளத்தில் பலத்த காற்றினால் 635 வீடுகளுக்கு சேதம்

புத்தளத்தில் பலத்த காற்றினால் 635 வீடுகளுக்கு சேதம்

புத்தளத்தில் பலத்த காற்றினால் 635 வீடுகளுக்கு சேதம்

எழுத்தாளர் Staff Writer

16 Apr, 2020 | 2:49 pm

Colombo (News 1st) புத்தளத்தில் நேற்று (15) பிற்பகல் வீசிய பலத்த காற்றினால் 635 வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளது.

5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார்.

இதனால் சுமார் 7000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொலொன்னா, கொடகவெல மற்றும் வெலிகபொல உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர மற்றும் கோகலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் மாத்தறை, பஸ்கொட மற்றும் கொடபல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்