நாட்டில் 237 கொரோனா நோயாளர்கள் பதிவு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 237 ஆக உயர்வு

by Staff Writer 15-04-2020 | 9:45 PM
Update: 15/04/2020 ; 9.40 PM: மேலும் 2 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து நாட்டில் மொத்தமாக 237 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் இருவர் இன்று (15)  அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டனர். ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களே புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் ஒருவர் புத்தளம் தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்தில் இருந்தவர் என கூறப்படுகின்றது. தொற்றுக்குள்ளானவர்களில் 8 பேர் பலாலியிலும் நால்வர் முழங்காவிலிலும் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் கண்காணிப்பட்டு வந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளர்கள் 163 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் 144 பேர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.