தொழில் திணைக்களத்திற்கு நாளாந்தம் முறைப்பாடுகள்

தொழில் திணைக்களத்திற்கு நாளாந்தம் முறைப்பாடுகள்

by Staff Writer 15-04-2020 | 3:22 PM
Colombo (News 1st) முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் நாளாந்தம் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பில் கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுக்க உத்தேசித்துள்ளதாக தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் R.P.A. விமலவீர தெரிவித்துள்ளார். நாளை மற்றும் நாளை மறுதினம் தொழிற்சாலைகள் தொடர்பிலான தகவல்களை திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.