by Staff Writer 14-04-2020 | 4:17 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - மாவடிச்சேனையில் தனது இரண்டு பிள்ளைகளை தந்தையொருவர் கிணற்றினுள் வீசி கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (14) அதிகாலை 2 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் 40 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசிக்கும் 7 மற்றும் 10 வயதுடைய பிள்ளைகளே உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
குறித்த பிள்ளைகளின் தாய் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பிள்ளைகள், கொழும்பில் கல்விகற்று வந்துள்ளதுடன், ஊரடங்கு சட்டம் காரணமாக அவர்கள் மட்டக்களப்பில் தமது வீட்டில் தங்கியிருந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.