கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 219 ஆகியது

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 219 ஆகியது

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 219 ஆகியது

எழுத்தாளர் Staff Writer

14 Apr, 2020 | 4:44 pm

Update: 14/04/2020 – 4.45 PM : நாட்டில் மேலுமொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

——————————————————————————————————————————

Colombo (News 1st) 14/04/2020 – 7.15 AM நாட்டில் மேலுமொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 155 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்றுக்குள்ளான 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேருவளை – சீனன் கோட்டை மற்றும் பன்னில ஆகிய பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் நேற்றைய தினம் 7 பேர் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை 6 மணிக்கு பேருவளை – சீனகொரட்டுவ மற்றும் பன்னில ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இதனடிப்படையில் அந்த பகுதிகளிலுள்ள மக்கள் அங்கிருந்து வௌியேறுவதற்கோ அல்லது வேறு நபர்கள் குறித்த பகுதிக்கு பிரவேசிக்கவோ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அந்தப்பகுதிகளிலிருந்து 7 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவ்விரண்டு பகுதிகளிலிருந்து மாத்திரம் 16 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அயல் பகுதிகளுக்கும் தொற்று ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் இரு பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளன. முடக்கப்பட்டிருந்த அட்டுலுகம பகுதி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது

என இராணுவத் தளபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்