இரு பிள்ளைகளை கிணற்றினுள் தள்ளி கொலை செய்த தந்தை கைது

இரு பிள்ளைகளை கிணற்றினுள் தள்ளி கொலை செய்த தந்தை கைது

இரு பிள்ளைகளை கிணற்றினுள் தள்ளி கொலை செய்த தந்தை கைது

எழுத்தாளர் Staff Writer

14 Apr, 2020 | 4:17 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – மாவடிச்சேனையில் தனது இரண்டு பிள்ளைகளை தந்தையொருவர் கிணற்றினுள் வீசி கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (14) அதிகாலை 2 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 40 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசிக்கும் 7 மற்றும் 10 வயதுடைய பிள்ளைகளே உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

குறித்த பிள்ளைகளின் தாய் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் பிள்ளைகள், கொழும்பில் கல்விகற்று வந்துள்ளதுடன், ஊரடங்கு சட்டம் காரணமாக அவர்கள் மட்டக்களப்பில் தமது வீட்டில் தங்கியிருந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்