அரச அச்சகத்தில் தீ

அரச அச்சகத்தில் தீ

அரச அச்சகத்தில் தீ

எழுத்தாளர் Staff Writer

14 Apr, 2020 | 4:30 pm

Colombo (News 1st) பொரளையில் அமைந்துள்ள அரச அச்சகத்தில் தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகேவிடம் வினவியபோது, அச்சகத்திலிருந்து அகற்றப்படும் ஆவணங்களை களஞ்சியப்படுத்தி வைக்கும் பகுதியிலேயே தீ ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்