அனைத்து சமுர்த்தி பயனாளர்களுக்கும் 16ஆம் திகதிக்குள் கொடுப்பனவு

அனைத்து சமுர்த்தி பயனாளர்களுக்கும் 16ஆம் திகதிக்குள் கொடுப்பனவு

அனைத்து சமுர்த்தி பயனாளர்களுக்கும் 16ஆம் திகதிக்குள் கொடுப்பனவு

எழுத்தாளர் Staff Writer

14 Apr, 2020 | 5:30 pm

Colombo (News 1st) அனைத்து சமுர்த்தி பயனாளர்களுக்கும் எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கி நிறைவுசெய்யுமாறு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஜனாதிபதி செயலணி ஆலோசனை வழங்கியுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.

17,98,293 சமுர்த்தி பயனாளிகளில் 17,23,215 பேருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

ஏனையோருக்கு எதிர்வரும் 2 நாட்களில் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 7,75,353 பேர் இந்த கொடுப்பனவை கோரி பதிவுசெய்துள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவர்களுக்கும் குறித்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குறைந்த வருமானம் பெறுபவர்கள் எவரேனும் இந்தப் பட்டியலுக்குள் உள்ளடக்கப்படாவிட்டால், மாவட்ட செயலாளர்கள் ஊடாக இணைந்துகொள்ள முடியும் எனவும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்